சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக வைத்தியசாலை தொடர்பாக
ஜனாதிபதி தலைமையில் கலந்துரையாடல்

டிசம்பர் 01, 2022

சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக வைத்தியசாலையை முறையாக நடத்துவது தொடர்பான கலந்துரையாடல் இன்று (30) முற்பகல் ரணில் விக்ரமசிங்க அவர்கள் தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.

இதன்போது வைத்தியசாலையின் திட்டம், வசதிகள் மற்றும் அதன் தற்போதைய பிரச்சினைகள் தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டது. ஆளணிப் பற்றாக்குறை மற்றும் நிதி நெருக்கடிகள் தொடர்பில் அதிகாரிகள் ஜனாதிபதிக்கு விளக்கமளித்தனர்.

கிடைக்கப்பெறும் வளங்களை திறம்பட பயன்படுத்தி அதிகபட்ச நன்மைகளை பெற வேண்டியதன் அவசியத்தை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, எழுந்துள்ள பிரச்சினைகளை உடனுக்குடன் தீர்த்து வைத்தியசாலையின் பணிகளை தொடர்வதன் முக்கியத்துவத்தையும் விளக்கினார்.

சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் (ஓய்வு பெற்ற) கமல் குணரத்ன, சுகாதார அமைச்சின் செயலாளர் எஸ்.ஜே.எஸ். சந்திரகுப்த, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன, சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக உபவேந்தர் மேஜர் ஜெனரல் மிலிந்த பீரிஸ், சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக வைத்தியசாலை சேவைகள் பணிப்பாளர் பிரிகேடியர் பி.எஸ். திலகரத்ன உள்ளிட்டோர் இந்த கலந்துரையாடலில் பங்கேற்றனர்.

நன்றி: ஜனாதிபதி ஊடகப் பிரிவு