ரணவிரு சேவா அதிகார சபையினால் நல திட்டங்கள் அறிமுகம்

டிசம்பர் 07, 2020

ரணவிரு சேவா  அதிகார சபையின் அனுசரணையுடன் சலுகை விலையில் கடற்படை மற்றும் விமானப்படை வீரர்களுக்கு சீமெந்துப் பைகளை வழங்குவதற்காக இலங்கை கடற்படை மற்றும் விமானப்படையுடன் புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்றினை பிரபல சீமெந்து உறபத்தி நிறுவனமான ஐஎன்எஸ்ஈஈ சீமெந்து செய்து கொண்டது. இந்த நிகழ்வு பாதுகாப்பு அமைச்சில் இன்றைய தினம் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில்,  பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன, ரணவிரு சேவா  அதிகார சபையின் தலைவர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) நந்தன சேனாதீர, ஐஎன்எஸ்ஈஈ சீமெந்து நிறுவனத்தின் தலைவர் நந்தன ஏக்கநாயக்க, இலங்கை கடற்படை மற்றும் விமானப்படையின் நலன்புரி பணிப்பாளர்கள் மற்றும் ஐஎன்எஸ்ஈஈ சீமெந்து நிறுவனத்தின் உத்தியோகத்தர்கள்  ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதன்போது, ஐஎன்எஸ்ஈஈ சீமெந்து நிறுவனத்தின் இத்தகைய ஆதரவுக்கு பாதுகாப்பு செயலாளர் தனது நன்றியைத் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.