இலங்கை விமானப்படையின் 8வது குழு மத்திய ஆப்பிரிக்காவில் ஐ.நா அமைதிகாக்கும் கடமைகளில் பங்கேற்பு

டிசம்பர் 05, 2022

இலங்கை விமானப்படையின் 8வது குழு மத்திய ஆபிரிக்காவில் ஐக்கிய நாடுகளில் அமைதிகாக்கும் கடமைகளில் பங்கேற்பதற்காக டிசம்பர் நான்காம் திகதி (நேற்று) இலங்கையையில் இருந்து வெளியேறியது.

பல்வேறு தொழில் துறைகளைச் சேர்ந்த 20 அதிகாரிகள் மற்றும் 89 விமானப்படை வீரர்களை உள்ளடக்கிய இலங்கை விமானப்படை குழு, துணைத் தளபதி விங் கமாண்டர் காஞ்சன லியனாராச்சி தலைமையில் செல்லவுள்ளது.