பலத்த காற்றுடன் மழை பெய்யும் என வானிலை முன்னறிவிப்பு
டிசம்பர் 08, 2022வளிமண்டலவியல் திணைக்களத்தின் சமீபத்திய கணிப்புகளின்படி, நாடு முழுவதும் பலத்த காற்றுடன் மழை பெய்யும் என முன்னறிவிப்பு விடுத்துள்ளது. தென்மேற்கு வங்காள விரிகுடாவில் (திருகோணமலைக்கு வடகிழக்கே 300 கி.மீ. அளவில்) சூறாவளியான “மண்டூஸ்” புயல் நாளை (டிசம்பர் 09) நள்ளிரவு தென்மேற்கு வங்கக்கடல் ஊடாக மேற்கு-வடமேற்கு திசைகளில் நகரும் என்று திணைக்களம் தெரிவித்துள்ளது.
வடக்கு மாகாணத்தில் இடைவிடாத மழை அல்லது பலத்த மழையுடன் மேகமூட்டமான வானம் தொடர்ந்தும் காணப்படும்.
சப்ரகமுவ மாகாணத்திலும் காலி, மாத்தறை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும்.
வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 60-70 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.