பல்வகை இராணுவ உற்பத்திக்கான இராணுவப் போர்க்கருவி படையணி தொழிற்சாலை திறந்து வைப்பு
டிசம்பர் 09, 2022இராணுவத் போர்க்கருவி படையணி இராணுவ தயாரிப்புகளில் புதிய மாற்றத்தை ஏற்படுத்துவதன் மூலம் பெருந் தொகை அந்நியச் செலாவணியை சேமிக்கும் வகையிலும், இராணுவ போர்க்கருவி உற்பத்தியில் தன்னிறைவு அடையும் நோக்கத்திலும் இராணுவ ஆயுதக் கைத்தொழில் சாலை இடம் மாற்றப்பட்டு இன்று காலை (8) திறந்து வைக்கப்பட்டது. வேயங்கொட மத்திய ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் களஞ்சியசாலை வளாகத்தில் இலங்கை இராணுவத்தின் முன்நகர்விற்கான மூலோபாய திட்டமிடல் 2020-2025' க்கு அமைவாக இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இலங்கை இராணுவ போர்க்கருவி படையணியின் அழைப்பின் பேரில் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டார். அவர் இராணுவத்தின் ஆயுத உற்பத்தியை ஊக்குவிக்கும் நோக்குடன், இந்த உற்பத்திசாலையை இடமாற்றம் செய்வதில் முக்கிய பங்காற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
2014 ஆம் ஆண்டில், இராணுவத்தின் முதல் ஆயுத தொழிற்சாலை தொம்பகொடவில் நிறுவப்பட்டது, இரும்பு கட்டில்கள், இரும்பு உபகரணங்கள், தோற் பொருட்கள், ஆடைகள், டயர்கள் மீள் நிரப்பல், கூடாரங்கள் போன்ற தேர்ந்தெடுக்கப்பட்டவைகளை உற்பத்தி செய்வதை நோக்கமாகக் கொண்டது.
வேயங்கொடவில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட வளாகத்தின் நிர்மாணப்பணி 2021 இல் ஆரம்பிக்கப்பட்டு 2022 டிசம்பர் தொடக்கத்தில் நிறைவடைந்தது.
இராணுவ போர்க்கருவி படையணியின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் எம்ஈபீ வீரசிங்க யூஎஸ்பீ ஏடிஓ அவர்கள், இராணுவத் தளபதியை அன்புடன் வரவேற்றார், வளாகத்தின் நுழைவாயிலில் பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதையும் தளபதிக்கு வழங்கப்பட்டதுடன், அப்படைத் தளபதியின் அழைப்பின் பேரில் இராணுவத் தளபதி 'மகா சங்கத்தினரின்' செத்பிரித்' பராயணங்களுக்கு மத்தியில் புதிய இராணுவ ஆயுதத் தொழிற்சாலையினை நாடா வெட்டி திறந்து வைத்ததுடன், பதாகையினையும் திரை நீக்கம் செய்தார்.
ஆடைகள், பெல்ட்கள், தொப்பிகள், காலணிகள், நெசவுகள், இரும்பு கட்டில்கள் மற்றும் பல்வேறு உபகரண உற்பத்திகளுக்கு தனித்தனி பிரிவுகளை உள்ளடக்கிய புதிய கட்டிடம், படைத் தளபதி மற்றும் பல அதிகாரிகள் உட்பட அன்றைய பிரதம அதிதியால் பார்வையிடப்பட்டது.
பின்னர் வருகை தந்த இராணுவத் தளபதி குழுப்படம் எடுக்கும் நிகழ்வுடன் கலந்து கொண்டதுடன், தனது வருகையை நினைவு கூறும் வகையில் தொழிற்சாலை வளாகத்தில் மரக்கன்று ஒன்றை நட்டி வைத்தார்.
இலங்கை இராணுவத் தொண்டர் படையணியின் தளபதி மேஜர் ஜெனரல் டி.ஜி.எஸ் செனரத்யாபா ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ, மேற்கு பாதுகாப்பு படை தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் டிஎம்கேடிபீ புஸ்ஸல்ல ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ, பாதிடூ மற்றும் நிதி முகாமைத்துவ பணிப்பகத்தின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் டபிள்யூபீஎஸ்எம் அபேசேகர ஆர்எஸ்பீ யுஎஸ்பீ, உபகரண பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் ஜயவர்தன ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ, இராணுவத் நிர்வாக வளங்கள் தளபதி மேஜர் ஜெனரல் எஸ்பீஏஐஎம்பீ சமரகோன் எச்டிஎம்சீ எல்எஸ்சீ ,மின்சார மற்றும் இயந்திரப் பொறியியல் பணிப்பகத்தின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் ஜேஏஆர்எஸ்கே ஜயசேகர, சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இராணுவத் போர்க்கருவி படையணியில் நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்டனர்.
இலங்கை இராணுவ போர்க்கருவிப் படையணியின் சிரேஷ்ட அதிகாரிகளுடனான பல சமீபத்திய சந்திப்புகளில், இராணுவத் தளபதி இராணுவத்திற்கும் நாட்டிற்கும் கணிசமான நிதி ஆதாரங்களைச் சேமிக்கும் இராணுவப் பொருட்கள் மற்றும் பொருட்களில் தன்னிறைவு பெற வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி இருந்தார்.
நன்றி - www.army.lk