--> -->

இந்திய கடற்படையின் 'INS SAHYADRI' என்ற கப்பல் உத்தியோகபூர்வ விஜயமாக கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது

டிசம்பர் 13, 2022

இந்திய கடற்படைக் கப்பல் (INS) சஹ்யாத்ரி இன்று காலை (13 டிசம்பர் 2022) முறையான பயணமாக கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. வருகை தந்த கப்பலை இலங்கை கடற்படையினர் கடற்படை மரபுகளுக்கு அமைவாக வரவேற்றனர்.

சஹ்யாத்ரி என்ற கப்பலானது, 143 மீட்டர் நீளமுள்ள யுத்தக்கப்பல் ஆகும், இது 390 பேர் கொண்ட குழுவினரால் நிர்வகிக்கப்படுகிறது மற்றும் இக்கப்பலுக்கு கெப்டன் எம்எம் தோமஸ்  தலைமை தாங்குகிறார்.

இதற்கிடையில், சஹ்யாத்ரி என்ற கப்பலின் கட்டளை அதிகாரி இன்று மேற்கு கடற்படை கட்டளைத் தலைமையகத்தில் உள்ள மேற்கு கடற்படை தளபதியை சந்திக்க உள்ளார்.

இக்கப்பல் தங்கியிருக்கும் காலத்தில், இரு கடற்படைகளுக்கு இடையேயான ஒத்துழைப்பையும் நல்லுறவையும் மேம்படுத்தும் நோக்கில், இலங்கை கடற்படையால் ஏற்பாடு செய்யப்பட்ட பல நிகழ்ச்சிகளில் அவரது குழுவினர் பங்கேற்கவுள்ளனர்.

மேலும், சஹ்யாத்ரி என்ற கப்பல் டிசம்பர் 16 ஆம் தேதி புறப்படும்போது மேற்கு கடல் பகுதியில் இலங்கை கடற்படையுடன் இணைந்து கடற்படை பயிற்சியை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிராந்திய கடற்படைகளுடனான இத்தகைய கடற்படை பயிற்சிகள் எதிர்காலத்தில் பொதுவான கடல்சார் சவால்களை மேம்பட்ட ஒத்துழைப்பின் மூலம் சமாளிக்க உதவும்.