கேரள கஞ்சா கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது

டிசம்பர் 16, 2022

யாழ்ப்பாணம் குருநகர் கடல் பிராந்தியத்தில் வியாழக்கிழமை (டிசம்பர்15) மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது 181 கிலோ கிராமிற்கு மேற்பட்ட கேரள கஞ்சா கடற்படையினரால் நேற்று கைப்பற்றப்பட்டது.  

சந்தேகத்திற்கிடமான படகு ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது 60 மில்லியன் ரூபாவிற்கும் மேற்பட்ட பெறுமதிவாய்ந்த தடைசெய்யப்பட்ட போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாக கடற்படை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நேற்று அதிகாலை மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் போது படகில் இருந்த சந்தேக நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது.

36 வயதான சந்தேக நபர் யாழ்ப்பாணம் பசூர் பகுதியைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.