‘விடுதலை என்ற போர்வையில் பிரபாகரனின் இரக்கமற்ற பயங்கரவாதம்’ என்ற புத்தக வெளியீட்டு விழாவில் பாதுகாப்புச் செயலாளர் கலந்து சிறப்பித்தார்

டிசம்பர் 16, 2022

பிரபல எழுத்தாளர் ஜே.எப்.ரஞ்சித் பெரேரா எழுதிய ‘விடுதலையின் போர்வையில் பிரபாகரனின் இரக்கமற்ற பயங்கரவாதம்’ என்ற புத்தக வெளியீட்டு விழா நேற்று மாலை (டிசம்பர் 15) கொழும்பில் உள்ள இலங்கை சுற்றுலா மற்றும் ஹோட்டல் முகாமைத்துவக் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன இதில் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார்.

இந்த விழாவின் பிரதம அதிதியாக கலந்துகொள்ள வருகை தந்த பாதுகாப்புச் செயலாளரை நூலாசிரியரான ஜே.எப்.ரஞ்சித் பெரேரா வரவேற்றார்.

இந்நிகழ்வில் கலந்துகொண்ட பாதுகாப்புச் செயலாளர் பிரமுகர்கள் மத்தியில் உரையாற்றுகையில் பயங்கரவாதத்தின் கொடூரமான பிடியில் இருந்து நமது தாய்நாட்டை விடுவிப்பதில் அளப்பரிய பங்களிப்பை வழங்கிய படைவீரர்கள். ஒன்றுகூடியுள்ள இந்த சந்தர்ப்பத்தில் இவ்வாறான ஓர் இலக்கியப் படைப்பை வெளியீட்டு வைப்பதில் எனக்கு கிடைத்த மிகப்பெரும் கெளரவமும் ஒரு வாய்ப்பும் ஆகும் எனத் தெரிவித்தார்.

"பிரபாகரனின் போலியான விடுதலையை நோக்கிய முயற்சியில் எண்ணற்ற நிகழ்வுகள் மற்றும் பல சம்பவங்களுக பின்னால் உள்ள உண்மைகளை வெளிப்படுத்தும் இந்த புத்தக வெளியீட்டை வெளியிடுவதில் நான் மிகவும் அதிர்ஷ்டசாலி" என்று மேலும் குறிப்பிட்டார்.

நூலாசிரியரின் இந்த முயற்சியைப் பாராட்டிய பாதுகாப்புச் செயலாளர், எல்.ரீ.ரீ.ஈ யினரால் வழிநடத்தப்பட்ட யுத்தம் மற்றும் நாட்டில் அமைதி மற்றும் நல்லிணக்கத்தை நிலைநாட்டுவதற்கு பாதுகாப்புப் படையினரின் பெரும் முயற்சியின் துல்லியமான மற்றும் உண்மை விவரங்களை சித்தரிக்கும் ஆவணப்படுத்தப்பட்ட சான்றுகள் மிகக் குறைவாகவே உள்ளன எனத் தெரிவித்தார்.

இந்த நிகழ்வின் போது பிரபல பேச்சாளர் பேராசிரியர் பிரதிபா மஹாநாமஹேவா சிறப்புரை ஆற்றினார்.

இந்த நூலின் ஆசிரியரான ஜே.எப்.ரஞ்சித் பெரேரா இலங்கை சுற்றுலா சபையின் ஒரு முன்னாள் பணிப்பாளர் நாயகம் என்பதுடன் இத்துறையில் அரச மற்றும் தனியார் துறைகளில் 40 வருடங்களுக்கும் மேலான நிர்வாக அனுபவத்தைக் கொண்டுள்ளார்.

இன்று வெளியிடப்பட்ட புத்தகத்துடன் நூலாசிரியர் ஆறு புத்தகங்களை வெளியிட்டுள்ளார். யுத்தத்ச்துக்குப் பின்னராக. விடயங்களை பற்றியே அவை அமைந்துள்ளது.
 
இந்நிகழ்வின் போது பாதுகாப்புச் செயலாளரினால் நூலாசிரியருக்கு நினைவுச் சின்னம் ஒன்றும் வழங்கப்பட்டது.

பாதுகாப்புப் படைகளின் பிரதம அதிகாரி ஜெனரல் சவேந்திர சில்வா, விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் சுதர்சன பத்திரன, முன்னாள் முப்படைத் தளபதிகள், ஆனந்தா கல்லூரியின் அதிபர், சிரேஷ்ட முப்படை அதிகாரிகள் மற்றும் கௌரவ அதிதிகள் பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.