வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன அட்மிரல் பதவிக்கு உயர்த்ப்பட்டுள்ளார்

டிசம்பர் 18, 2022

அதிமேதகு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களினால் நேற்று (17) முதல் ஆயுதப்படைகளின் தலைமை தளபதியாக முன்னால் கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன அவர்களை அட்மிரல் பதவிக்கு உயர்த்தியுள்ளார்.

இவர் இலங்கை கடற்படையின் 24வது தளபதியாக கடமையாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது. 37 வருடங்கள் வெற்றிகரமான தனது சேவையினை முடித்துக் கொண்ட இவர் இன்று (18) சேவையிலிருந்து ஓய்வு பெற உள்ளார்.