புதிய கடற்படை தளபதியாக வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா நியமிக்கப்பட்டுள்ளார்

டிசம்பர் 18, 2022

கௌரவ ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள், ரியர் அட்மிரல் பிரியந்த பெரேரா அவர்களை வைஸ் அட்மிரல் தரத்திற்கு உயர்த்தி, இலங்கை கடற்படையின் (SLN) 25வது தளபதியாக இன்று (18) நியமித்துள்ளார்.

இந்த நியமனத்திற்கு முன்னர் அவர் இலங்கை கடற்படையின் தலைமை அதிகாரியாக கடமையாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா புதிய கடற்படைத் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.