கண்டியில் ஏற்பட்ட தீயை இராணுவத்தினர் அணைத்தனர்

டிசம்பர் 20, 2022

மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 11வது படைப்பிரிவின் 111வது பிரிகேட் படையினரால் அண்மையில் கண்டி ஸ்ரீ சங்கராஜ மாவத்தையில் உள்ள மூன்று மாடி வீடொன்றில் ஏற்பட்ட தீ அணைக்கப்பட்டது.

2வது சிங்கப் படையணியின் படையினருடன் 10வது கஜபா படையணியின் படையினர் மற்றும் கண்டி பொலிஸ் உயிர்காப்புப் படை அதிகாரிகள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டதாக இலங்கை இராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன.