ஐ.நா.வின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகர் தலைமையிலான
பிரதிநிதிகள் பாதுகாப்புச் செயலாளருடன் சந்திப்பு

டிசம்பர் 22, 2022

ஐக்கிய நாடுகள் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகராலயத்தின் ஆசிய மற்றும் பசுபிக் பிராந்திய பணியகத்தின் பணிப்பாளர் திரு. இந்திரிக்க ரத்வத்தை தலைமையிலான பிரதிநிதிகள் பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன அவர்களை சந்தித்தனர்.

கோட்டே, ஸ்ரீ ஜயவர்தனபுரயிலுள்ள பாதுகாப்பு அமைச்சில் இன்று (டிசம்பர் 22) இந்த சந்திப்பு இடம்பெற்றது.

பாதுகாப்பு அமைச்சுக்கு வருகை தந்த இந்திரிக்க ரத்வத்தை தலைமையிலான குழுவினர் பாதுகாப்புச் செயலாளரினால் வரவேற்கப்பட்டதை தொடர்ந்து இவர்களுக்கிடையில் சுமூகமான கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.

இச்சந்திப்பினை நினைவு கூறும் வகையில் பாதுகாப்புச் செயலாலார் அவர்களுக்கு திரு. ரத்வத்தை அவர்கள் நினைவுச்சின்னம் ஒன்றையும் வழங்கிவைத்தார்.

ஐக்கிய நாடுகள் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகராலய பிரதிநிதிகள் குழுவில் திரு. மெனிக் அமரசிங்க (இலங்கைக்கான காரியாலய பிரதானி) மற்றும் சஞ்சிதா சத்தியமூர்த்தி ஆகியோரும் கலந்து கொண்டனர்.

குறித்த இச்சந்திப்பின் போது பாதுகாப்பு செயலாளரின் இராணுவ உதவி அதிகாரி கேர்ணல் ரசிக குணசேனவும் கலந்துகொண்டார்.