பாதுகாப்பு செயலாளர் தேசிய மாணவர் படையணி தலைமையகத்திற்கு விஜயம்
டிசம்பர் 23, 2022பாதுகாப்பு செயலாளர் கமல் குணரத்ன இன்று (டிசம்பர் 23) பாமன்கடயில் உள்ள தேசிய மாணவர் படையணி தலைமையகத்திற்கு விஜயமொன்றை மேற்கொண்டார்.
தேசிய மாணவர் படையணி தலைமையகத்திற்கு விஜயம் மேற்கொண்ட பாதுகாப்பு செயலாளரை தேசிய மாணவர் படையணியின் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் பிரியந்த ஜயசுந்தர (ஓய்வு) உள்ளிட்ட உயர் அதிகாரிகள் வரவேற்றனர்.
நாட்டில் உள்ள பாடசாலைகளில் கெடட் படைப்பிரிவுகள் நிறுவப்பட்டு அதனை நெறிப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு சமூகத்தில் சவால்களை எதிர்கொள்ளும் வகையில் இளைஞர்கள் ஆற்றல்மிக்க, பல்துறை மற்றும் ஒழுக்கமான பிரஜைகளாகவும் சிறந்த தலைமைப் பண்புகளைக் கொண்டவர்களாக உருவாக்கவும் நோக்காகக் கொண்டு தேசிய மாணவர் படையணியானது பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ஒரு நிறுவனமாகும்.
ஜெனரல் குணரத்ன தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடலின் போது தேசிய மாணவர் படையணியின் முன்னேற்றம், தற்போதைய நடவடிக்கைகள் மற்றும் எதிர்கால திட்டங்கள் குறித்து கேட்டறிந்தார்.
இதன்போது, பணிப்பாளர் மேஜர் ஜெனரல் ஜயசுந்தர உட்பட மாணவர் படையணியின் நிர்வாக அதிகாரிகள் இதன் முன்னேற்றம் மற்றும் திட்டங்கள் தொடர்பாக விளக்கமளித்தனர்.
பாதுகாப்பு செயலாளர் தனது விஜயத்தின் நினைவாக மரக்கன்று ஒன்றையும் நட்டிவைத்தார்.
மேலும், இந்த விஜயத்தை நினைவு கூறும் வகையில் தேசிய மாணவ படையணி பணிப்பாளரினால் பாதுகாப்பு செயலாளருக்கு நினைவுச் சின்னமொன்றும் வழங்கி வைக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் பாதுகாப்பு அமைச்சின் இராணுவ இணைப்பு அதிகாரி மேஜர் ஜெனரல் தினேஷ் நாணயக்காரவும் கலந்து கொண்டார்.