ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் புதிய வேந்தராக ஜெனரல் கோட்டேகொட நியமிக்கப்பட்டுள்ளார்

டிசம்பர் 23, 2022

ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் வேந்தராக ஓய்வுபெற்ற ஜெனரல் எஸ்.எச்.எஸ். கோட்டேகொடவை கௌரவ ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள் நியமித்துள்ளார்.

சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் 1981 ஆம் ஆண்டுக்கான 68 ஆம் இலக்க சட்டத்தின் 7பி (1) சரத்துக்கமையவே  (திருத்தப்பட்டது) ஜனாதிபதி இந்த நியமனத்தை மேற்கொண்டுள்ளார் என ஜனாதிபதி ஊடகப் பிரிவினால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் வேந்தராக ஜெனரல் கோட்டேகொட அவர்கள் ஐந்தாண்டு காலப்பகுதிக்காக நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.