இராணுவ வீரர்களின் பிள்ளைகளுக்கு கல்வி உதவித்தொகைகள்

டிசம்பர் 29, 2022

இராணுவ வீரர்களின் பிள்ளைகளுக்கு கல்விப் புலமைப்பரிசில்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு அண்மையில் இராணுவ தலைமையகத்தில் இடம்பெற்றது.

இதற்கமைய கல்விப் பொது  தராதர உயர்தரப் பரீட்சையில் விசேட சித்திபெற்ற இராணுவ வீரர்களின் பிள்ளைகளுக்கு இந்த புலமைப்பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டதாக இராணுவ தகவல்கள் தெரிவிக்கின்றன.

உயர்தரப் பரீட்சையில் விசேட சித்திபெற்ற இராணுவ வீரர்களது பிள்ளைளின் உயர்கல்விக்கு உதவும் நோக்கில் இந்த ஊக்கத்தொகை வழங்கப்பட்டது. அரச ஈட்டு, முதலீட்டு வங்கி மற்றும்  டயலொக் ஆக்சியாட்டா நிறுவனங்களின் ஒத்தழைப்புடன் இராணுவத்தின் நலன்புரி பணியகத்தினால் வருடதிற்கு ரூ.120,000.00 என்ற  வகையில்  8 புலமைப்பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டது. மேலும் தெரிவு செய்யப்பட்ட 23 மாணவர்களுக்கு  ஸ்மார்ட்போன்கள் வழங்கி வைக்கப்படன.

மேலும், ஹேகித்த இராணுவ வள நிலையத்தில் (RRC) தேசிய தொழிற்கல்வித் தகைமை (NVQ) தரம் 4 மற்றும் 3 பாடநெறிகளை வெற்றிகரமாக பூர்த்தி செய்த இராணுவ வீரர்களுக்கு கடந்த டிசம்பர் 27 திகதி இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகே தலைமையில் இராணுவத் தலைமையகத்தில் சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டன.

இலங்கையின் மூன்றாம் நிலை மற்றும் தொழிற்கல்வி ஆணைக்குழுவின் (TVEC) பணிப்பாளர் நாயகம் கலாநிதி கே.ஏ.லலிததீர மற்றும் இராணுவ அதிகாரிகளின் பிரதாணி மேஜர் ஜெனரல் சி.டி வீரசூரிய ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.