இராணுவத்தினர் கும்புறுப்பிட்டி கிராமத்தில் புதிய நீர்
சுத்திகரிப்பு இயந்திரம் அமைத்தனர்

ஜனவரி 01, 2023

கிழக்கு (SFHQ-E) பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் உள்ள இலங்கை இராணுவத்தின் 17 ஆவது இலங்கை தேசிய காவலர் (SLNG) படையினர்களினால் அண்மையில் கும்புறுப்பிட்டியில் நீர் சுத்திகரிப்பு இயந்திரம் ஒன்று நிர்மாணிக்கப்பட்டது.

17 வது கடற்படையின் கட்டளை அதிகாரி மேஜர் P.G.L ஹேமகுமார அவர்களின் வேண்டுகோளுக்கமைய இலங்கை தேசிய காவலர் (SLNG) படையினர்களின் ஒத்துழைப்புடன் ஹொரணையில் உள்ள பாடிலைன் (Bodyline) நிறுவனத்தின் உரிமையாளரான திரு.சதுர குலரத்ன அவர்களினால் வழங்கி வைக்கப்பட்ட ஒரு மில்லியன் ரூபாய் நிதியுதவியுடன் சுமார் 500 குடுபம்பகள் பயனடையும் வகையில் இத்திட்டம் நிறைவேற்றப்பட்டது என இராணுவத்தினர் தெரிவிக்கின்றன.

பாடிலைன் (Bodyline) லிமிடெட் நிறுவனத்தின் பிரதிநிதிகள், இராணுவ அதிகாரிகள், படைவீரர்கள் மற்றும் கிராம மக்களுடைய பங்கேற்புடன் இந் நீர் சுத்திகரிப்பு இயந்திரம் திறந்து வைக்கப்பட்டது.