அனர்த்த முகாமைத்துவ பிரிவின் இணையதளம் ஆரம்பித்து வைக்கப்பட்டது

ஜனவரி 02, 2023

பாதுகாப்பு அமைச்சின் அனர்த்த முகாமைத்துவ பிரிவுக்கான www.disastermin.gov.lk என்ற  உத்தியோகபூர்வ இணையத்தளம் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ பிரமித பண்டார தென்னகோன் அவர்களினால் கொழும்பிலுள்ள பாதுகாப்பு இராஜாங்க அமைச்சில் இன்று (ஜன. 02) ஆரம்பித்து வைக்கப்பட்டது.

அமைச்சுக்கு வருகை தந்த இராஜாங்க அமைச்சர் இந்த இணையத்தளத்தை ஆரம்பித்து வைத்ததுடன், அனர்த்த முகாமைத்துவ நிலையம் (DMC), வளிமண்டலவியல் திணைக்களம் மற்றும் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) ஆகியவற்றின் அதிகாரிகளுடன் சுமுகமாக கலந்துரையாடினார்.

அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்க, வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஏ.கே. கருணாநாயக்க, தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் பொறியியலாளர் ஆசிரி கருணாவர்தன, பாதுகாப்பு அமைச்சின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் (பாதுகாப்பு)  ஹர்ஷ விதானாரச்சி மற்றும் சிரேஷ்ட அதிகாரிகளும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.