கடற்படையின் புதிய தலைமை அதிகாரி பதவி ஏற்றார்

ஜனவரி 03, 2023

ஜனாதிபதி மற்றும் ஆயுதப்படைகளின் தளபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களால்  ரியர் அட்மிரல் ஜயந்த குலரத்ன 2022 டிசம்பர் 23 முதல் இலங்கை கடற்படையின் தலைமை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

ரியர் அட்மிரல் குலரத்ன இன்று (ஜனவரி 03) கடற்படைத் தலைமையகத்தில் வைத்து கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவிடமிருந்து தனது நியமனக் கடிதத்தை உத்தியோகபுர்வமாக பெற்றுக்கொண்டார்.

ரியர் அட்மிரல் குலரத்ன இதற்கு முன்னர் பிரதிப் தலைமை அதிகாரியாகவும் கிழக்கு கடற்படைத் தளபதியாகவும் பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.