--> -->

அரச நிறுவனங்களில் தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும்

ஜனவரி 05, 2023

முன்னாள் பரிசுத்தப் பாப்பரசர் 16 ஆவது பெனடிக்ட் திருத்தந்தை ஆற்றிய மகத்தான சேவைகளை போற்றுமுகமாக மற்றும் அவரின் விண்ணேற்றத்தை குறிக்குமுகமாக இன்று (05 ஜனவரி) அனைத்து அரச நிறுவனங்களிலும் தேசியக் கொடியை அரைக்கம்பத்தில் பறக்கவிடுமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள் பணித்துள்ளார். 

முன்னாள் பரிசுத்தப் பாப்பரசர் 16 ஆவது பெனடிக்ட் திருத்தந்தை புத்தாண்டு தினத்தன்று (சனிக்கிழமை) தனது 95வது வயதில் வத்திக்கானில் காலமானார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் நேற்று (புதன் 04) கொழும்பிலுள்ள வத்திக்கான் அபோஸ்தலிக்க தூதரகத்திற்கு தனது அனுதாபத்தைத் தெரிவிக்கச் சென்றார். தனது விஜயத்தின் போது இலங்கைக்கான வத்திக்கான் அப்போஸ்தலிக்க தூதுவர் புனித பிரையன் உடேக்வே ஆண்டகையைச் சந்தித்த ஜனாதிபதி, அவருடன் சிறு உரையாடலில் ஈடுபட்டார். ஜனாதிபதி அவர்கள் அங்கு வைக்கப்பட்டுள்ள அனுதாப புத்தகத்தில் குறிப்பொன்றையுமிட் டார் என ஜனாதிபதி ஊடக பிரிவு செய்திகள் தெரிவிக்கின்றன. 

முன்னாள் பரிசுத்தப் பாப்பரசர் 16 ஆவது பெனடிக்ட் 2005 முதல் 2013 வரை எட்டு ஆண்டுகள் பரிசுத்தப் பாப்பரசராக பணியாற்றி ஓய்வு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

புகைப்படம்  நன்றி - ஜனாதிபதி ஊடகப் பிரிவு