இராணுவத்தினரால் யால சரணாலயத்தில் 60,000 மரக்கன்றுகள் நடும் திட்டம் முன்னெடுப்பு
ஜனவரி 09, 2023வனவிலங்கு மற்றும் வனப் பாதுகாப்பு அமைச்சினால் யால சரணாலயத்தில் முன்னெடுக்கப்பட்ட தேசிய மர நடுகை திட்டத்திற்கு மத்திய பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 12 வது படைப்பிரிவின் கீழுள்ள 121 வது பிரிகேடின் 20 வது இலங்கை சிங்கப் படையணி மற்றும் 18 வது கெமுனு ஹேவா படையினர் தங்களது ஒத்துழைப்பை வழங்கினர்.
இத்திட்டத்தினூடாக 45 நாட்களுக்குள் 600 ஏக்கர் நிலப்பரப்பில் 60,000 மரக்கன்றுகள் நடுவதற்காக படையினர் தங்களது ஒத்துழைப்பினை வழங்கி வருகின்றனர். யால, வத்தேகம, கெபிலித்த மற்றும் அதனை அண்மித்த வனப் பகுதிகளை உள்ளடக்கி டிசம்பர் 13 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட திட்டமானது இம்மாத இறுதியில் ஜனவரி 23 ல் நிறைவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
மத்திய பாதுகாப்புப் படைத் தலைமையகத்திற்கு இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்கள் வழங்கிய அறிவுறுத்தலின் பேரில், மத்திய பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் மொஹான் ரத்நாயக்க அவர்கள், வனஜீவராசிகள் மற்றும் வன பாதுகாப்பு அமைச்சின் அதிகாரிகளுடன் நெருக்கமான ஒருங்கிணைப்புடன் இத்திட்டத்தை முன்னெடுத்தார்.
மருதம், புளி, மஹோகனி, பர்மா தேக்கு, தெலம்பு, காயன் மற்றும் இலங்கை நா மரம் போன்ற அழிந்து வரும் மரக்கன்றுகள் 22 நாட்களில் படையினரால் நாட்டப்பட்டன.
மொனராகலை பிரதேச வன அதிகாரி திரு பிரபாத் பண்டார, பிராந்திய வன அதிகாரி திரு. எல். சமீர அவர்களின் மற்றும் அவர்களின் அலுவலக அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் 20 வது இலங்கை சிங்கப் படையணி மற்றும் 18 வது கெமுனு ஹேவா படையணியின் 82 படையினர் தமக்கு வழங்கப்பட்ட பணியை புதன்கிழமை (4) 22 நாட்களுக்குள் நிறைவு செய்தனர்.
இந்த மகத்தான திட்டத்திற்கு 12 வது காலாட் படைபிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் மிஹிந்து பெரேரா மற்றும் 121 வது காலாட் பிரிகேட் தளபதி பிரிகேடியர் ஜனக உடோவிட்ட ஆகியோர் படையலகிகள் மற்றும் கட்டளை அதிகாரிகள் இணைந்து தமது ஒத்துழைப்பை வழங்கினர்.