நாட்டில் 13,831 பீசீஆர் பரிசோதனைகள் நேற்று முன்னெடுப்பு

டிசம்பர் 08, 2020

கடந்த 24 மணித்தியாலங்களில் வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 703 பேர் புதிதாக அடையாளம் காணப்பட்டதை அடுத்து நாட்டின் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 28,579 ஆக அதிகரித்துள்ளதாக கொவிட்-19 பரவல் தடுப்பு செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

நேற்றைய  தினம் அடையாளம் காணப்பட்டவர்களில் கொழும்பு மாவட்டத்தை சேர்ந்த 371 பேரும், கம்பஹா மாவட்டத்தைச் சேர்ந்த 102 பேரும் களுத்தறை  மாவட்டத்தை சேர்ந்த 64 பேரும் என கொவிட்-19 பரவல் தடுப்பு செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

மினுவாங்கொடை மற்றும் பேலியகொடை கொத்தணியில் வைரஸ் தோற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 25,021 ஆக அதிகரித்துள்ள அதேவேளை, 17,396 பேர் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.

நாட்டில் 13,831 பீசீஆர் பரிசோதனைகள் நேற்றைய தினம் மேற்கொள்ளபட்டதாக கொவிட்-19 பரவல் தடுப்பு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

கடந்த 24 மணித்தியாலங்களில் வைரஸ் தொற்றுக்குள்ளான இரண்டு  பேர் உயிரிழந்துள்ளனர். இதற்கமைய நாட்டில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 142 ஆக  அதிகரித்துள்ளது.

மேலும், படையினரால் மேற்பார்வை செய்யப்படும் 64 தனிமைப்படுத்தல் மையங்களில் சுமார் 6,878 பேர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.