ஐக்கிய அரபு இராச்சியத்தின் தூதுவர் பாதுகாப்பு செயலாளரைச் சந்தித்தார்
ஜனவரி 12, 2023இலங்கைக;கான ஐக்கிய அரபு இராச்சியத்தின் தூதுவர் அதிமேதகு காலித் நாசர் சுலைமான் அல்அமெரி அவர்கள் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவை மரியாதை நிமித்தம் சந்தித்தார்.
இந்த சந்திப்பு கோட்டே ஸ்ரீ ஜயவர்தனபுரவில் உள்ள பாதுகாப்பு தலைமையக வளாகத்தில் இன்று (ஜனவரி 12) இடம்பெற்றது.
அதனைத் தொடர்ந்து ஜெனரல் குணரத்ன மற்றும் தூதுவர் அல்அமெரி ஆகியோருக்கிடையில் இடம்பெற்ற சுமூகமான கலந்துரையாடலின் போது, இரு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான வழிகள் தொடர்பாக கலந்துரையாடினர்.
ஐக்கிய அரபு இராச்சியத்தில் தற்போது பணிபுரிந்துவரும் இலங்கையர்களினால் வழங்கப்படும் பாரிய மனித வளத்தின் பங்களிப்புகள் தூதுவரால் பாராட்டப்பட்டதுடன், தனது நாட்டின் வளர்ச்சியில் இலங்கையர்களின் பங்கு மிகவும் குறிப்பிடத்தக்கது எனவும் சுட்டிக்காட்டினார்.
பாதுகாப்பு அமைச்சுக்கு முதல் விஜயத்தை மேற்கொள்ளும் தூதுவருக்கு ஜெனரல் குணரத்ன தனது வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.
இந்த சந்திப்பை நினைவுகூரும் வகையில், பாதுகாப்பு செயலாளர் மற்றும் ஐக்கிய அரபு இராச்சியத்தின் தூதுவர் ஆகியோருக்கிடையில் நினைவுச் சின்னங்களும் பரிமாறிக் கொள்ளப்பட்டது.
பாதுகாப்பு அமைச்சின் இராணுவ இணைப்பு அதிகாரி மேஜர் ஜெனரல் தினேஷ் நாணயக்காரவும் இந்த சந்திப்பில் கலந்து கொண்டார்.