பலாலி தனிமைப்படுத்தல் மையத்திலிருந்து 89 பேர் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்

டிசம்பர் 08, 2020

இத்தாலியிலிருந்து நாடு திரும்பி பலாலியில் உள்ள இலங்கை விமானப்படை தனிமைப்படுத்தல் மையத்தில் தனிமைப்படுத்தலுக்கு  உட்படுத்தப்பட்ட  89 பேர்  தனிமைப்படுத்தல் காலத்தை கால பூர்த்தி செய்த தன் பின்னர் நேற்றய தினம்  தமது வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இவ்வாறு தமது வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்ட37 ஆண்கள் மற்றும் 52 பெண்கள் அடங்கிய குழுவினர்மேலும்  இரண்டு வாரங்களுக்கு தமது வீடுகளில்  சுய-தனிமைப்படுத்தலுக்கு உட்படுமாறு  உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளதாக விமானப்படை தெரிவித்துள்ளது.