நாட்டில் பல இடங்கள் மலையுடன் கூடிய காலநிலை

ஜனவரி 17, 2023

பிற்பகல் அல்லது இரவு வேளையில் நாட்டின் பல மாகாணங்களில் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இன்று (ஜன. 17) காலை வெளியிடப்பட்ட வளிமண்டலவியல் திணைக்களத்தின் வானிலை அறிக்கைக்கமைய, மேல், சப்ரகமுவ, தெற்கு, மத்திய, ஊவா மற்றும் வடமேல் மாகாணங்களில் பிற்பகல் அல்லது இரவு வேளையில் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் சுமார் 75 மில்லிமீற்றர் வரையிலான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

கிழக்கு மற்றும்  தென் மாகாணங்களில் காலை வேளையில் சிறிதளவு மழை பெய்யக்கூடும்.

இடியுடன் கூடிய மழையின் போது பலத்த காற்று மற்றும் மின்னலினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை தவிர்க்க போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொது மக்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.