பாதுகாப்பு அமைச்சு பணியாளர்களுக்கு சைபர் பாதுகாப்பு
குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி

ஜனவரி 17, 2023

பாதுகாப்பு அமைச்சின் பணியாளர்களுக்கு சைபர் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி ஒன்று இன்று (ஜனவரி 17) பாதுகாப்பு அமைச்சில் நடத்தப்பட்டது. 

சைபர் அச்சுறுத்தல்களை அடையாளம் காணுதல் மேலும் அவற்றை தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைக எடுத்தல் குறித்து அமைச்சக பணியாளர்களுக்கு அறிவூட்டுமுகமாக அமைச்சின் தகவல் தொழில்நுட்ப பிரிவினால் இந்நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

இதன்போது, இலங்கை இராணுவத்தின் தகவல் தொழில்நுட்ப பணிப்பாளர் பிரிகேடியர் சஜித் லியனகே மற்றும் கட்டளை அதிகாரி, 12 இலங்கை சிக்னல் படையணியின் கேர்ணல் கே.வி.பி.தம்மிக்க தலைமையிலான இராணுவ சைபர் பாதுகாப்பு பிரிவின் (CSU) குழுவினரால், சைபர் தாக்குதல்கள் மற்றும் அத்தகைய சந்தர்ப்பங்களில் பின்பற்ற வேண்டிய தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விரிவுரைகள் நிகழ்த்தப்பட்டது.

மேலதிக செயலாளர்- சிவில் பாதுகாப்பு மற்றும் அபிவிருத்தி சமன் திஸாநாயக்க, பணிப்பாளர் நாயகம் - திட்டமிடல் அனுர ரணசிங்க, மேலதிக செயலாளர் - தொழில்நுட்ப (வேலைபார்க்கும்) பொறியியலாளர் W R N R பிரேமச்சந்திர, பிரதம நிதி அதிகாரி (ii) DS பத்மசிறி அமைச்சின் தொடர்பாடல்  ஆலோசகர் பிரிகேடியர் அசோக குணசேகர உட்பட அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள், சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள் மற்றும் அமைச்சரக பணியாளர்கள் பலரும் இந்நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.