ரதெல்ல பிரதேசத்தில் விபத்துக்குள்ளான மக்களை மீட்பதற்கு இராணுவம் உதவியது
ஜனவரி 23, 2023மத்திய பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 11 வது படைப்பிரிவின் 112 வது காலாட் பிரிகேட் படையினர் வெள்ளிக்கிழமை (20) மாலை 7.00 மணியளவில் நுவரெலியா - ஹட்டன் வீதியில் ரதெல்ல பிரதேசத்தில் தரம் 10 மாணவர்கள் 41 பேர் ஆசிரியர்கள் 8 பேர் மற்றும் பெற்றோர்கள் பயணித்த பஸ் ஒன்று வான் மற்றும் முச்சக்கர வண்டியுடன் மோதி 75 அடி ஆழமான பள்ளத்தில் வீழ்ந்துள்ளதாக கிடைக்கப்பெற்ற தகவலின் பேரில் சம்பவிடத்துக்கு உடனடியாக விரைந்தனர்.
தொழிநுட்பக் கோளாறினால் பேருந்தை கட்டுப்படுத்த முடியாத சாரதி 7 பொதுமக்கள் பயணித்த வான் மீதும் 4 பயணிகளுடனான முச்சக்கர வண்டியொன்றின் மீதி மோதியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சுற்றுலா சென்று திரும்பிய போது 40 கொழும்பு தர்ஸ்டன் கல்லூரி மாணவர்கள் காயமடைந்து நுவரெலியா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக தகவல் உறுதிப்படுத்தியுள்ளன.
முதற்கட்ட தகவல் அடிப்படையில் கட்டுப்பாட்டை இழந்த பேரூந்து வான் மற்றும் முச்சக்கர வண்டி மீது மேதியதன் காரணமாக வானில் பயணித்த 7 பேரில் 6 பேரும் முச்சக்கர வண்டியில் பயணித்த 4 பேரில் ஒருவர் நுவரெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளனர்.
இச்சம்பவ இடத்திலிருந்து 3 வது (தொ) இலங்கை சிங்கப் படையணி அதிகாரி ஒருவரும் 20 க்கும் மேற்பட்ட சிப்பாய்களும் பொதுமக்களின் உதவியுடன் சடலங்கள் மற்றும் காயமடைந்தவர்களை அருகிலுள்ள வைத்தியசாலைகளுக்கு அனுப்பி வருகின்றனர். 3 வது (தொ) இலங்கை சிங்கப் படையணி கட்டளை அதிகாரி மேஜர் டபிள்யூ.ஜி.டி.டபிள்யூ.ஏ.எம்.ஆர்.பி.எஸ் போயகொட அவர்கள் 112 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் சுமிந்த தயாவன்ச மற்றும் மத்திய பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி ஆகியோரின் ஒருங்கிணைப்புடன் அவசரகால மீட்பு நடவடிக்கை மற்றும் அவசரகால நிவாரண நடவடிக்கைகளை மேற்பார்வையிட்டு வருகின்றர்.
நன்றி - www.army.lk