சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தின் இறுதியாண்டு செயல்திட்ட கண்காட்சி நடைபெற்றது

ஜனவரி 24, 2023

பொறியியல் பீடத்தின் ஆராய்ச்சி பிரிவு (EFRC) ஏற்பாடு செய்த ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தின் இறுதியாண்டு செயல்திட்ட கண்காட்சி (FYPE) அண்மையில் பொறியியல் பீடத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின்  உபவேந்தர் மேஜர் ஜெனரல் மிலிந்த பீரிஸ் கலந்து கொண்டார்.

இறுதியாண்டு பொறியியல் மாணவர்களின் சிறந்த ஆராய்ச்சி கண்டுபிடிப்புகளில் கவனம் செலுத்தும் வகையில் இக்கண்காட்சி (FYPE-2022) திட்டமிடப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பல்வேறு பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த சிரேஷ்ட கல்வியாளர்கள் மற்றும் தொழில்துறைகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நிபுணர்களும் பொருட்களைக் காட்சிப்படுத்தும் போது மதிப்பீட்டுக் குழுவில் கலந்து கொண்டனர்.

பீடாதிபதிகள், பணிப்பாளர்கள், திணைக்களத் தலைவர்கள், பேராசிரியர்கள், சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள் மற்றும் பொறியியல் பீடத்தைச் சேர்ந்த கல்வியாளர்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.