நந்திக்கடல் மாணவர்களுக்கு இராணுவம் பூப்பந்து மைதானத்தை பரிசாக வழங்கியது

ஜனவரி 24, 2023

நந்திக்கடல் மாந்தை அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் பயிலும் மாணவர்களின் பூப்பந்து ஆர்வத்தை மேம்படுத்தும் நோக்கில் பாடசாலை வேண்டுகோளின் பேரில் 652 வது காலாட் பிரிகேட் படையினர் பூப்பந்து மைதானத்தை நிர்மாணித்து புதன்கிழமை (ஜன. 18) திறந்து வைத்தனர்.

வன்னி பாதுகாப்பு படை தலைமையக தளபதி மற்றும் 65 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் பிரசாத் எதிரிசிங்க அவர்களின் வழிகாட்டலின் கீழ் 652 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் சஞ்சீவ வனசேகர அவர்களால் இந்த திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

65 வது காலாட் படைப்பிரிவின் தளபதி அவர்கள் 652 வது பிரிகேட் தளபதியுடன் இணைந்து பூப்பந்து மைதான திறப்பு விழாவில் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

இந்த நிகழ்வின் போது மாந்தை கிழக்கு பிரதேச செயலாளர், கிராமசேவை அதிகாரிகள் மற்றும் 652 வது காலாட் பிரிகேட் படையினர் கலந்து கொண்டனர்.

நன்றி - www.army.lk