சந்தஹிரு சேயவின் நிர்வாக கட்டிடம் திறந்து வைக்கப்பட்டது

ஜனவரி 28, 2023

பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன அனுராதபுரத்திலுள்ள சந்தஹிரு சேய ஸ்தூபியின் புதிய நிர்வாக கட்டிடம் இன்று (ஜனவரி 28) திறந்து வைத்தார்.

இன்று காலை மகா சங்கத்தினரின் மத ஆசீர்வாதங்களுக்கு மத்தியில் பாதுகாப்பு செயலாளர் இப்புதிய கட்டிடத்தை திறந்து வைத்தார்.

இதன்போது சமய நிகழ்வுகள் வண. ராமஎல பியதிஸ்ஸ தேரரின் தலைமையில் நடைபெற்றது.

பாதுகாப்புப் படைகளின் பிரதானி, முப்படை தளபதிகள் மற்றும் சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

இந்நிர்வாக கட்டிட வளாகம் முப்படை வீரர்களின் தொழில்நுட்ப நிபுணத்துவம் மற்றும் மனித வள பங்களிப்புடன் கட்டப்பட்டது. இந்த ஸ்தூபி நிர்வாகத்தின் பல்வேறு நிர்வாக அலுவலகங்களை ஓரிடத்தில் கொண்டியங்க இடமளிக்கும்.

தாய் நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த போர் வீரர்களை நினைவு கூறும் வகையில் கட்டப்பட்ட "சந்தஹிரு சேய" ஸ்தூபி 2021 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் மகா சங்கத்தினர் மற்றும் பக்தர்களின் மத அனுஷ்டானங்களுக்காக திறந்து வைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் பாதுகாப்பு அமைச்சின் இராணுவ இணைப்பு அதிகாரி மேஜர் ஜெனரல் தினேஷ் நாணயக்கார உட்பட சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள், பாதுகாப்பு அமைச்சின் அதிகாரிகள் மற்றும் திட்ட அலுவலர்களும் கலந்து கொண்டனர்.