யாழ்ப்பாணத்தில் இந்திய அமைதி காக்கும் போர்வீரர்கள் நினைவேந்தல்
ஜனவரி 30, 2023இலங்கையில் 1987-1990 காலகட்டத்தில் விடுதலைப் புலிகளுக்கு எதிராகப் போரிட்டு வீரமரணம் அடைந்த இந்திய அமைதி காக்கும் படையின் வீரர்களின் நினைவேந்தல் மற்றும் அவர்களின் தியாகங்கள் இந்திய குடியரசு தினத்தை ஒட்டி வியாழக்கிழமை (ஜன. 26) பலாலியில் உள்ள இந்திய அமைதிப் காக்கு படை நினைவு தூபியில் நினைவுகூரப்பட்டது.
யாழ்ப்பாணத்தில் உள்ள இலங்கைக்கான இந்தியத் தூதரகத்துடன் இணைந்து யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையகம் இந்த நிகழ்வை ஏற்பாடு செய்தது. யாழ்ப்பாணத்தில் உள்ள இலங்கைக்கான இந்தியத் தூதரகத் தூதுவர் திரு ராகேஷ் நட்ராஜ் மற்றும் யாழ் பாதுகாப்புப் படை தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சுவர்ண போதொட்ட ஆகியோர் இந்திய அமைதிப் காக்கு படை நினைவு தூபியில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், இலங்கைக்கான இந்தியத் தூதரக அலுவலக அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் ஆகியோர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.
நன்றி - www.army.lk