இலங்கை கடற்படை செல்ல கதிர்காமத்தில் 951வது நீர் சுத்திகரிப்பு
நிலையத்தை நிறுவியது

ஜனவரி 30, 2023

செல்ல கதிர்காமத்தில் இலங்கை கடற்படையால் (SLN) நிர்மாணிக்கப்பட்ட புதிய ரிவேர்ஸ் ஒஸ்மோசிஸ் (RO) நீர் சுத்திகரிப்பு நிலையம் அங்கு வசிக்கும் சுமார் 450 குடும்பங்களின் நீண்டகால தேவையான சுத்தமான குடிநீரை இலகுவாகப் பெற்றுக்கொள்ள உதவியாக அமையும்.

செல்ல கதிர்காமம் ஸ்ரீ தம்மணிகேதன ஆலயம் மற்றும் பிரிவெனாவில் நிறுவப்பட்ட கடற்படையினால் நிர்மாணிக்கப்பட்ட RO நீர் சுத்திகரிப்பு நிலையம் நேற்று (ஜனவரி 29) பொதுமக்களுக்கு கையளிக்கப்பட்டதாக கடற்படை ஊடகம் தெரிவித்துள்ளது.

இந்த புதிய நீர் சுத்திகரிப்பு நிலையம் இலங்கை கடற்படையால் அதன் சமூக பொறுப்பு திட்டத்தின் கீழ் நிறுவப்பட்ட 951 வது RO நிலையம் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.

சுகாதார அமைச்சின் ஆதரவுடன் கடற்படை தொழில்நுட்ப நிபுணத்துவத்துடன் நிர்மாணிக்கப்பட்ட இந் நீர் சுத்திகரிப்பு நிலையம் தெற்கு கடற்படைத் தளபதி ரியர் அட்மிரல் சமன் பெரேரா அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.

ஸ்ரீ தம்மணிகேதன ஆலயம் மற்றும் பிரிவெனாவின் பிரதான குரு வண. ஹீல்லே ஞானானந்த தேரர் உட்பட மகா சங்கத்தவரின் ஆசிகளுக்கு மத்தியில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது.