முப்படை வீரர்களுக்கு சலுகை விலையில் சீமெந்து வழங்க இன்ஸீ (INSEE) சிமெண்ட் நிறுவனம் பாதுகாப்பு அமைச்சுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது

ஜனவரி 30, 2023

முப்படை வீரர்களுக்கு சலுகை விலையில் சீமெந்து வழங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்ததம் ஒன்று கையெழுத்திடப்பட்டது. இதற்கமைய இன்ஸீ (INSEE) சிமெண்ட் நிறுவனம் மற்றும் பாதுகாப்பு அமைச்சுக்கிடையே ஒப்பந்தம் ஒன்று இன்று (ஜனவரி 30) பாதுகாப்பு அமைச்சில் கையெழுத்திடப்பட்டது.

இந்நிகழ்வின் போது இலங்கை இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படையின் நலன்புரி பணிப்பாளர்களுக்கு இன்ஸீ (INSEE) சிமெண்ட் நிறுவனத்தின் தலைவர் நந்தன ஏக்கநாயக்க மற்றும் பிரதம நிறைவேற்று அதிகாரி ஜான் குனிக் ஆகியோர் அடையாளப்பூர்வமாக வவுச்சர்களை கையளித்து வைத்தனர்.

இந்நிகழ்வில் கலந்துக்கொண்ட பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன, இன்ஸீ (INSEE) சிமெண்ட் நிறுவனம் வழங்கிய ஆதரவிற்கு தனது பாராட்டுக்களை தெரிவித்தார்.

பாதுகாப்பு அமைச்சின் இராணுவ இணைப்பு அதிகாரி மேஜர் ஜெனரல் தினேஷ் நாணயக்கார, இன்ஸீ (INSEE) சிமெண்ட் நிறுவனத்தின் சிரேஷ்ட அதிகாரிகளான வெளிவிவகார மற்றும் சேனல் அபிவிருத்தி தலைவர் சந்தன நாணயக்கார, பணிப்பாளர் (வர்த்தகம்) நந்தன அமுனுதுடுவ, பொது முகாமையாளர் (விற்பனை) ஷாபீ கான், சந்தைப்படுத்தல் தலைமை அதிகாரி கயானி பெரேரா, சேனல் அபிவிருத்தி முகாமையாளர் மதுர பெர்னாண்டோ, நிர்வாக அதிகாரி கோலித ஹர்ஷன மற்றும் முப்படைகளின் நலன்புரி பணிப்பாளர்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.