ரஷ்ய தூதுவர் பாதுகாப்பு செயலாளருடன் சந்திப்பு
டிசம்பர் 09, 2020இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் அதிமேதகு யூரி மெட்டரி பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன வை பாதுகாப்பு அமைச்சில் இன்று (9) சந்தித்தார்.
பாதுகாப்புச் செயலாளருக்கும் ரஷ்ய தூதுவருக்கும் இடையிலான இந்த நல்லெண்ண சந்திப்பின் போது பரஸ்பர மற்றும் இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு விடயங்கள் தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது.
இலங்கையில் உள்ள ரஷ்ய தூதரகத்தின் பாதுகாப்பு இணைப்பாளர் கேர்ணல் டெனிஸ் ஐ ஸ்கோடாவும் இந்த சந்திப்பில் கலந்துகொண்டார்.
இதேவேளை இராணுவ இணைப்பு அதிகாரி பிரிகேடியர் தினேஷ் நாணயக்கார மற்றும் பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளர் (பாதுகாப்பு) திரு. பி பீ எஸ் சி நோனிஸ் ஆகியோரும் இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர்.