சவூதி பாதுகாப்பு ஆலோசகர் பாதுகாப்பு செயலாளரை சந்தித்தார்

பெப்ரவரி 02, 2023

இலங்கையில் உள்ள சவூதி அரேபிய தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் பிரிகேடியர் ஜெனரல் (கலாநிதி) முகமது எஸ்ஸா எச் அல்ஹர்பி, பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன அவர்களை மரியாதை நிமித்தம் பாதுகாப்பு அமைச்சில் இன்று (பெப்ரவரி 02) சந்தித்தார்.

ஜெனரல் குணரத்ன சவூதி தூதரக பாதுகாப்பு ஆலோசகரை அன்புடன் வரவேற்றார். பின்னர் நடந்த சுமூகமான கலந்துரையாடளின் போது தற்போதுள்ள பாதுகாப்பு ஒத்துழைப்பு மற்றும் பயிற்சி வாய்ப்புகள் மேம்படுத்துவது தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

பாதுகாப்பு அமைச்சின் இராணுவ இணைப்பு அதிகாரி மேஜர் ஜெனரல் தினேஷ் நாணயக்காரவும் இந்நிகழ்வில் கலந்துக் கொண்டார்.