பங்களாதேஷ் மற்றும் நேபாளம் வெளிவிவகார அமைச்சர்கள் இலங்கை வருகை

பெப்ரவரி 02, 2023

பங்களாதேஷ் மற்றும் நேபாளம் வெளியுறவு அமைச்சர்கள் இன்று (பெப்ரவரி 02) இலங்கை வந்தடைந்தனர்.

உத்தியோகபூர்வ விஜயமாக கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை இன்று மாலை வந்தடைந்த பங்களாதேஷ் வெளிவிவகார அமைச்சர் கௌரவ கலாநிதி ஏ.கே. அப்துல் மொமென் மற்றும் நேபாள வெளியுறவு அமைச்சர் கௌரவ கலாநிதி பிமலா ராய் பௌத்யல் ஆகிய இருவரையும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ பிரெமித பண்டார தென்னகோன் வரவேற்றார்.

எதிர்வரும் சனிக்கிழமை (பெப்ரவரி 04) நடைபெறவுள்ள இலங்கையின் 75ஆவது சுதந்திர தின பிரதான நிகழ்வுகளில் கலந்து சிறப்பிக்கும் வகையிலேயே இவர்கள் நாட்டிற்கு வருகை தந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.