விபத்தில் சிக்கிய உள்ளூர் மீனவர்கள் பாதுகாப்பாக கரைக்கு கொண்டு வரப்பட்டனர்

பெப்ரவரி 03, 2023

திருகோணமலை கிழக்கு கடற்பரப்பில் மீன்பிடி படகு பாறையுடன் மோதி விபத்துக்குள்ளான நான்கு (04) உள்ளூர் மீனவர்களை கடற்படை மீட்பு குழுவினர் பாதுகாப்பாக கரைக்கு அழைத்து வந்தனர்.

குறித்த மீனவர்கள் கடந்த வாரம் (ஜனவரி 24) மோசமான மீன்பிடி இழுவை படகில் (IMUL-A-0048-TLE) கோட் வளைகுடா மீன்பிடி துறைமுகத்திலிருந்து புறப்பட்டனர். சீரற்ற காலநிலை காரணமாக படகு பாறையில் மோதி விபத்துக்குள்ளானதாக கடற்படை தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த விபத்து பற்றிய தகவல் கிடைத்தவுடன் கடற்படை மீட்பு குழுவினர் கடற்படையின் லங்காபடுனவில் இருந்து குறித்த இடத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். அதன் பின்னர் மீனவர்கள் பத்திரமாக கரைக்கு கொண்டு வரப்பட்டனர்.