பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ஐவரி கோஸ்ட் தூதுவருடன் சந்திப்பு

பெப்ரவரி 03, 2023

இலங்கைக்கான ஐவரி கோஸ்டின் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள அதிமேதகு Eric Camille N'dry இன்று (பெப்ரவரி 03) கொழும்பில் உள்ள பாதுகாப்பு இராஜாங்க அமைச்சில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ பிரமித பண்டார தென்னகோன் அவர்களை சந்தித்தார்.

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் மற்றும் ஐவரி கோஸ்ட் தூதுவர் ஆகியோருக்கிடையில் இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் குறித்து சுமுகமான கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.

இந்த சந்திப்பின் போது தூதரகத்தின் சிரேஷ்ட அதிகாரி மற்றும் இலங்கை பாதுகாப்பு அமைச்சின் சிரேஷ்ட உதவி செயலாளர் (பாதுகாப்பு) திரு. ஹர்ஷ விதானாராச்சி ஆகியோரும் கலந்துகொண்டனர்.