துருக்கி பாதுகாப்பு ஆலோசகர் பாதுகாப்புச் செயலாளர் சந்திப்பு

பெப்ரவரி 03, 2023

இலங்கைக்கான துருக்கி தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கேர்ணல் சேர்வெட் ஒகுமுஸ் மரியாதை நிமிர்த்தம் பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவை சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தினார்.

கோட்டே, ஸ்ரீ ஜயவர்த்தனபுரயிலுள்ள பாதுகாப்பு அமைச்சு கட்டிடத் தொகுதியில் இந்த சந்திப்பு (பெப்ரவரி 3 )இடம்பெற்றது.

அமைச்சுக்கு வருகை தந்த துருக்கி பாதுகாப்பு ஆலோசகரை பாதுகாப்புச் செயலாளர் வரவேற்றார். அதனைத் தொடர்ந்து இருவருக்கும் இடையிலான நல்லெண்ண சந்திப்பு இடம் பெற்றது. இதன்போது இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.

இந்த சந்திப்பின் போது இரு நாடுகளுக்கு இடையே காணப்படும் பரஸ்பரம் உறவு நினைவு கூறப்பட்டதுடன் பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்து தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.

தனது இந்த சந்திப்பை நினைவு கூறும் வகையில் இருவருக்கும் இடையில் நினைவுச் சின்னங்கள் பரிமாறப்பட்டது.

இந்தியாவை தலமாகக் கொண்டு இயங்கும் துருக்கி தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகராக கடமையாற்றும் கேர்ணல் சேர்வெட் ஒகுமுஸ் நாளை கொழும்பு காலி முகத்திடலில் இடம் பெறவுள்ள இலங்கையின் 75 ஆவது தேசிய சுதந்திர தின பிரதான நிகழ்வில் கலந்து கொள்ளும் பொருட்டு இலங்கை வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை பாதுகாப்பு அமைச்சின் இராணுவ இணைப்பு அதிகாரி மேஜர் ஜெனரல் தினேஷ் நாணயக்காரவும் இந்த சந்திப்பில் கலந்து கொண்டார்.