சிறப்பாக நடைபெற்ற தேசிய சுதந்திர தின அணிவகுப்புக்கு
பாதுகாப்பு அமைச்சு பாராட்டு

பெப்ரவரி 04, 2023

இலங்கையின் 75வது தேசிய சுதந்திர தின கொண்டாட்டம் “நமோ நமோ மாதா-நூற்றாண்டை நோக்கி ஒரு படி” என்ற தொனிப்பொருளின் கீழ் இன்று (பெப்ரவரி 04) கொழும்பு, காலி முகத்திடலில் மிகவும் வெற்றிகரமாக நடைபெற்றது.

இந்த தேசிய நிகழ்வையும் அணவகப்பையும் வெற்றிகரமாக நடாத்தி முடிப்பதற்கு சிறந்த தலைமைத்துவம் வழங்கிய பாதுகாப்புப் படைகளின் பிரதம அதிகாரி, முப்படைத் தளபதிகள், பொலிஸ் மா அதிபர், சிவில் பாதுகாப்பு படை பணிப்பாளர் நாயகம், கடலோரக் காவல்படையின் பணிப்பாளர் நாயகம், பொலிஸ் விசேட அதிரடிப் படையின் கட்டளை அதிகாரி மற்றும் தேசிய மாணவ படையின் பணிப்பாளர் ஆகியோருக்கு பாதுகாப்பு அமைச்சு தனது பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறது.

மேலும், முப்படைகளின் பிரதம அதிகாரிகள், இராணுவ நிறைவேற்று ஜெனரல், பணியாளர் நிர்வாக பணிப்பாளர் (இராணுவம்), பணிப்பாளர் நாயகம் நிர்வாகம் (கடற்படை), பணிப்பாளர் நாயகம் தரை நடவடிக்கை (விமானப்படை) ஆகியோருக்கும் பாதுகாப்பு அமைச்சு தனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறது.

இந்த தேசிய முயற்சியில் மகத்தான அர்ப்பணிப்பை வெளிப்படுத்தும் இவர்களின் மகத்தான பங்களிப்பிற்காக முப்படை மற்றும் பொலிஸ், மாணவர் படை மற்றும் பாடசாலை சிறுவர்கள் முதல் உயர்மட்ட அதிகாரிகள் வரை உள்ள அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கின்றது.

இறுதியாக, நாட்டின் தேசியக் கொடியை வானில் பறக்க விடுவதற்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கின்றது.