இலங்கை கடலோரப் பாதுகாப்புபடை அதிக கடலாமை குஞ்சுகளை கடலில் விடுவித்தது

பெப்ரவரி 07, 2023

இலங்கை கடலோரப் பாதுகாப்பு படை மிரிஸ்ஸ மற்றும் பலபிட்டியவில் இருந்து 140க்கும் மேற்பட்ட கடலாமை குஞ்சுகளை அண்மையில் கடலுக்கு விடுவித்தது. இலங்கை கடலோரப் பாதுகாப்பு படையினர் 13569 ஆமை முட்டைகளை பாதுகாத்து 1153 குஞ்சுகளை 2023 இல் கடலில் விடுவித்ததாக கடலோரப் பாதுகாப்புபடை தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கை கடலோரப் பாதுகாப்புபடை அதன் கடலாமை பாதுகாப்பு திட்டத்தின் (CGTCP) கீழ் ஆயிரக்கணக்கான கடலாமை குஞ்சுகளை கடலுக்கு விடுவித்துள்ளது. மிரிஸ்ஸ, ஹிக்கடுவ, மொரகொல்ல மற்றும் பலபிட்டிய ஆகிய இடங்களில் உள்ள உயிர்காக்கும் நிலையங்களில் இணைக்கப்பட்ட கடலோர பாதுகாப்பு படையினர் இந்த மாதத்தின் முதல் வாரத்தில் மட்டும் (பெப்ரவரி 1 முதல் 6 வரை) 2052 கடலாமை முட்டைகளை அவர்களின் இயற்கை வாழ்விடத்திற்கு அருகில் இருந்து மீட்டுள்ளனர்.

கடலாமைகள் அழிந்து வரும் உயிரினங்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளதால், ஆமை முட்டைகளை அவற்றின் இயற்கையான வாழ்விடத்திலோ அல்லது அதைச் சுற்றியுள்ள இடங்களிலோ பாதுகாக்க இலங்கை கடலோரப் பாதுகாப்புபடை அனைத்து முயற்சிகளையும் எடுத்துவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.