கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் பட்டதாரி
கற்கைகள் பீடத்தில் இ - நூலக சேவைகள் பிரிவு ஆரம்பிக்கப்பட்டது

பெப்ரவரி 09, 2023

ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகம் அண்மையில் பட்டதாரி கற்கைகள் பீட வளாகத்தில் இ - நூலக சேவைகள் பிரிவு ஒன்றினை ஆரம்பித்தது.

இந்த புதிய இ - நூலகமானது, இ - புத்தகங்கள், பத்திரிகை கட்டுரைகள், பத்திரிகைகள், காணொளிகள் மற்றும் கடந்த கால வினாத்தாள்களுக்கான பரந்த அளவிலான தொடர்பு மற்றும் வலையமைப்புக்கான ஒரு வாய்ப்பை ஏற்படுத்தும் என பல்கலைக்கழக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிகழ்வில், பிரதம அதிதியாக பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் மேஜர் ஜெனரல் மிலிந்த பீரிஸ், பிரதி உபவேந்தர் (பாதுகாப்பு மற்றும் நிர்வாகம்) பிரிகேடியர் சிந்தக விக்கிரமசிங்க, அனைத்து பீடாதிபதிகள், பணிப்பாளர்கள் மற்றும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.