பாதுகாப்பு தொடர்பான புதிய முன்னேற்றங்களை அடையாளம் காண தேசிய பாதுகாப்பு கற்கைகள் நிறுவனம் களம் அமைத்துள்ளது - பாதுகாப்பு செயலாளர்
பெப்ரவரி 09, 2023ஆய்வு, கல்வி மற்றும் வலையமைப்பு ஆகியவற்றில் சிறந்து விளங்குவதன் மூலம் இலங்கையின் தேசிய பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக இலங்கையின் தேசிய பாதுகாப்பு சிந்தனைக் குழுவாக தேசிய பாதுகாப்பு கற்கைகள் நிறுவனம் (INSS) நடத்திய ஆய்வுகள் மற்றும் தொடர்புடைய பாதுகாப்பு கற்கைகள் இலங்கை அரசாங்கத்திற்கான தேசிய பாதுகாப்பு அணுகுமுறைகளை உருவாக்குவதில் சமீபத்திய பாதுகாப்பு முன்னேற்றங்களை அடையாளம்காண வழிவகுத்துள்ளது.
பத்தரமுல்லையிலுள்ள தேசிய பாதுகாப்பு கற்கைகள் நிறுவனத்தில் (ஐஎன்எஸ்எஸ்) இன்று (பெப்ரவரி 9) நடைபெற்ற பாதுகாப்பு மீளாய்வு - 2022 இன் வெளியீட்டு நிகழ்வில் ஜெனரல் கமல் குணரத்ன இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார்.
பாதுகாப்பு மீளாய்வு என்பது ஐஎன்எஸ்எஸ்ஸின் (INSS) வருடாந்த அறிவார்ந்த சர்வதேச சஞ்சிகை மற்றும் இன்று தொடங்கப்பட்ட வெளியீடு பல முக்கிய சிந்தனையைத் தூண்டும் பகுதிகளைக் குறிக்கிறது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட பாதுகாப்பு செயலாளரை ஐஎன்எஸ்எஸ் (INSS) இன் பதில் பணிப்பாளர் நாயகம் ரியர் அட்மிரல் திமுது குணவர்தன வரவேற்றதுடன் நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் வரவேற்பு உரையையும் நிகழ்த்தினார்.
இந்நிகழ்வில் உரையாற்றிய பாதுகாப்புச் செயலாளர், தேசிய பாதுகாப்பு பின்னணியை உணரக்கூடிய தலைப்புகளின் முறையான ஆய்வுப் பகுதிகளை அடையாளம் காணும் வகையில் 2022 ஆம் ஆண்டின் பாதுகாப்பு தொடர்பான மீளாய்வு சரியான முறையில் உதவுகிறது எனத் தெரிவித்தார்.
பல்வேறு ஆராய்ச்சிகளில் இருந்து தங்கள் மதிப்புமிக்க கண்டுபிடிப்புகளை முன்வைக்க பாதுகாப்பு ஆராய்ச்சி நிபுணர்களுக்கு இது பெரிதும் உதவும். மேலும் இந்த துறையிலுள்ள புதியவர்களின் அறிவை அதிக அளவில் மேம்படுத்த ஊக்குவிக்கும் எனவும் ஜெனரல் குணரத்ன மேலும் குறிப்பிட்டார்.
பொறியியல், சட்டம், புவியியல், விஞ்ஞான மற்றும் மொழிகள் ஆகிய துறைகளைச் சேர்ந்த அறிஞர்களின் விடாமுயற்சியையும், குறிப்பிட்ட தலைப்புகளில் வாசகர்களின் அறிவை மேம்படுத்துவதற்கான அவர்களின் முயற்சியையும் பாராட்டிய அவர், இந்த நூற்றாண்டில் தேசிய பாதுகாப்பின் உண்மையான அர்த்தத்தைப் பற்றிய வழக்கத்திற்கு மாறான மற்றும் வழக்கமான புரிதலின் முக்கிய தேவையை இது பூர்த்தி செய்கிறது எனத் தெரிவித்தார்.
மேலும் கருத்து தெரிவித்த பாதுகாப்புச் செயலாளர், பாதுகாப்பு அமைச்சரான ஜனாதிபதியின் வழிகாட்டலின் கீழ் உள்நாட்டு மற்றும் உலகளாவிய நிபுணத்துவத்துடன் பாரம்பரிய தேசிய பாதுகாப்பு உரையாடலை ஒரு பரந்த மற்றும் கூட்டுத் தளமாக மாற்ற இந்த ‘பாதுகாப்பு மீளாய்வு 2022’ உதவும் எனத் தெரிவித்தார்.
இந்நிகழ்வை நினைவு கூறும் வகையில், ஐஎன்எஸ்எஸ் (INSS) இன் பதில் பணிப்பாளர் நாயகம் ரியர் அட்மிரல் திமுது குணவர்தன பிரதம அதிதிக்கு ‘பாதுகாப்பு மீளாய்வு 2022’ இன் பிரதியை வழங்கினார்.
களனிப் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் வண. பேராசிரியர் நெடலகமுவே தம்மதின்ன தேரர், ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட பேராசிரியர் ஹேமந்தி ரணசிங்க, பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளர் ஜயந்த எதிரிசிங்க, எழுத்தாளர்கள், ஆய்வாளர்கள், சக மதிப்பாய்வாளர்கள் மற்றும் சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள், ஐஎன்எஸ்எஸ் ஊழியர்கள் மற்றும் பல்வேறு குழுக்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.