அத்தனகலு ஓயாவில் ஏற்பட்ட அடைப்பு இராணுவ உதவியுடன் நீக்கப்பட்டது

பெப்ரவரி 10, 2023

அத்தனகல்ல பிரதேச செயலக அலுவலகத்தினால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக இலங்கை இராணுவத்தினர் வடிகால் நீரின் அடைப்பை நீக்குவதற்கு தங்களின் உதவியை வழங்கினர். மரக்கிளைகள், இலைகளை நீக்கி மங்கலதிரிய பிரதேசத்தில் இருந்து மண் மேடுகளை கொண்டுவந்து அத்தனகல ஓயவின் அணைக்கட்டின் அடைப்பை நீக்கும் பணிகளை மேற்க்கொண்டனர்.

141வது காலாட் படையணியின் கீழ் இயங்கிவரும் 6வது படைப் பிரிவின் இலங்கை பீரங்கிப் படையின் இராணுவப் படையினர் மற்றும் இலங்கை கடற்படையினர் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மற்றும் நீர்ப்பாசனத் திணைக்கள ஊழியர்களுடன் இணைந்து பெப்ரவரி 06 மற்றும் 07ஆம் திகதிகளில் இத்திட்டத்தை முன்னெடுத்ததாக இராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன.