யாழ்ப்பாணத்தில் உள்ள இளைஞர்களுக்கு இராணுவத்தின்
ஏற்பாட்டில் கடற்கரை கரப்பந்து பயிற்சி

பெப்ரவரி 16, 2023

யாழ்ப்பாணம் பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் கீழ் உள்ள இலங்கை இராணுவத்தின் (SLA) படையினர் யாழ்ப்பாணக் குடாநாட்டில் வடமராட்சி - கிழக்கில் உள்ள இளைஞர்களுக்காக அண்மையில் தலைடி கடற்கரையில் கடற்கரை கரப்பந்து பயிற்சியை நடத்தினர்.

இராணுவ கடற்கரை கரப்பந்து பயிற்றுவிப்பாளர்கள் தலைமையில் இடம்பெற்ற இப்பயிற்சியில் யாழ் குடாநாட்டின் 15 விளையாட்டுக் கழகங்களின் உறுப்பினர்கள் கலந்து கொண்டு பயிற்சியில் ஈடுபட்டதாக இராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன.

553வது படையணியின் 10வது விஜயபாகு காலாட் படைப்பிரிவு மற்றும் 12வது விஜயபாகு காலாட் படைப்பிரிவின் படையினரால் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டதாக இராணுவ ஊடகம் தெரிவித்துள்ளது

55 ஆவது காலாட் படைப்பிரிவின் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் பிரசன்ன குணரத்ன, இராணுவ அதிகாரிகள் மற்றும் அரச அதிகாரிகள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.