சிறந்த கடற்படைக் கப்பலாக ‘சிந்துரல’ தெரிவு செய்யப்பட்டுள்ளது

பெப்ரவரி 16, 2023

இலங்கை கடற்படையின் வருடாந்த சிறந்த கப்பல் போட்டியில் 2022 ஆம் ஆண்டின் சிறந்த கப்பலாக இலங்கை கடற்படை கப்பல் ‘சிந்துரல’ தெரிவு செய்யப்பட்டுள்ளது.

கடற்படை ஊடக வட்டாரங்களின்படி, இலங்கை கடற்படைக் கப்பல் சிந்துரல, இலங்கை கடற்படைக் கப்பல் மிஹிகத மற்றும் P 414 ஆகியவை முறையே பெரிய மற்றும் சிறிய மற்றும் வேகமான தாக்குதல் கப்பல் பிரிவுகளில் சிறந்த செயல்திறன் கொண்டதாக பெயரிடப்பட்டுள்ளன.
 
இந்த ஆண்டு போட்டியானது இலங்கை கடற்படையின் கப்பல்களில் சிறந்த கப்பல், சிறந்த சிறிய கப்பல் மற்றும் சிறந்த விரைவு தாக்குதல் கப்பல் ஆகியவற்றை தெரிவு செய்வதற்காக நடத்தப்படுகிறது.

ஒவ்வோர் கப்பலும் அதன் பணியாளர்களும் கப்பல்களின் கயிறு கையாளுதல், கடல் விதிகள் பற்றிய அறிவு, செயல்பாட்டு கடல் பயிற்சி மதிப்பீடு மற்றும் கப்பல்களுக்கு இடையேயான போட்டிகளில் பெற்ற சாதனைகள் ஆகியவற்றின் அடிப்படையில் சிறந்த கப்பல்கள் பட்டியலிடப்படுகிறது.
 
இலங்கை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவினால் அண்மையில் (பெப்ரவரி 13) இடம்பெற்ற நிகழ்வொன்றில் இரண்டு கப்பல்களின் கட்டளை அதிகாரிகளுக்கு நினைவு சின்னங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
 
இந்நிகழ்வில் பிரதி தலைமை அதிகாரி மற்றும் பணிப்பாளர் நாயகம் செயற்பாடுகள் ரியர் அட்மிரல் பிரதீப் ரத்நாயக்க, இலங்கை கடலோரக் காவல்படையின் பணிப்பாளர் நாயகம் மற்றும் சிரேஷ்ட கடற்படை அதிகாரிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.