இலங்கை கடற்படை கப்பல்கள் காலி முக திடலில் காட்சிக்கு

டிசம்பர் 10, 2020

‘இது உங்கள் கடற்படை’ மற்றும் ‘உங்கள் கடற்படையை அறிந்து கொள்ளுங்கள்’ என்ற கருப்பொருளின் கீழ், கடற்படையின் 70 வது ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு  கொண்டு இலங்கை கடற்படையின் மூலதனக் கப்பல்கள் காலிமுகத்திடல் கடற்பரப்பில் நங்கூரமிடப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த கப்பல்கள் 13ஆம் திகதி வரை காலிமுகத்திடல் கடலில் தொடர்ந்து நங்கூரமிட்டு நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் என கடற்படை தெரிவித்துள்ளது.

இலங்கையின் கடல்வள முதன்மை  காவலனான கடற்படை தனது 70 ஆவது வருட பூர்த்தி நேற்றைய தினம் வெகு விமர்சையாக கொண்டாடியது குறிப்பிடத்தக்கது.