ரக்னா ஆரக்ஷக லங்கா நிறுவனத்திற்கு பாதுகாப்புச் செயலாளர் விஜயம்

பெப்ரவரி 17, 2023

பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன இன்று (பெப்ரவரி 17) பத்தரமுல்ல சுஹுருபாயவில் உள்ள வரையறுக்கப்பட்ட ரக்னா ஆரக்ஷக லங்கா நிறுவனத்திற்கு விஜயம் செய்தார்.

ரக்னா ஆரக்ஷக லங்கா ஒரு முன்னணி பாதுகாப்பு சேவை வழங்குநராகும், இது பாதுகாப்பு அமைச்சின் கீழ் இயங்கும் அரசாங்கத்திற்கு சொந்தமான நிறுவனமாகும்.

பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளர் (சிவில் பாதுகாப்பு மற்றும் அபிவிருத்தி) திரு. சமன் திஸாநாயக்க, ரக்னா ஆரக்ஷக லங்கா இன் அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.