கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் போர்வீரர் நினைவுத் தூபியை
பிரதமர் திறந்து வைத்தார்

பெப்ரவரி 18, 2023

ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் (KDU) புதிதாக நிர்மாணிக்கப்பட்ட போர்வீரர் நினைவுத் தூபியை கௌரவ பிரதமர் தினேஷ் குணவர்தன நேற்று (பிப்ரவரி 17) திறந்து வைத்தார்.

இந்த நிகழ்வில் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவும் கலந்து கொண்டார்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் பயங்கரவாத பிடியிலிருந்து தாய்நாட்டைப் பாதுகாப்பதற்காக உயிர் தியாகம் செய்த அனைத்து போர் வீரர்களுக்கும் அஞ்சலி செலுத்தும் வகையில் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் பழைய மாணவர் சங்கம் மற்றும் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் பங்களிப்புடன் இந்நினைவுத் தூபி நிர்மாணிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் வேந்தர் ஜெனரல் சாந்த கோட்டேகொட, உபவேந்தர் மேஜர் ஜெனரல் மிலிந்த பீரிஸ், பாதுகாப்புப் படைகளின் பிரதம அதிகாரி ஜெனரல் சவேந்திர சில்வா, இராணுவ மற்றும் கடற்படைத் தளபதிகள், விமானப்படை பிரதம அதிகாரி, ஓய்வுபெற்ற சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் சேவையாற்றும் முப்படைகள் மற்றும் பொலிஸ் அதிகாரிகள், பல்கலைக்கழகத்தின் பழைய மாணவர் சங்கத்தின் உறுப்பினர்கள் மற்றும் பல்கலைக்கழகத்தின் கல்வி மற்றும் நிர்வாக பணியாளர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.