பாதுகாப்பு சேவை கட்டளை மற்றும் பதவிதாரிகள் கல்லூரியினால் தளபதிகளுக்கான
தெற்காசிய சர்வதேச மாநாடு - 2023

பெப்ரவரி 18, 2023

ஐக்கிய இராச்சியத்தின் கூட்டுப் படை கட்டளை மற்றும் பதவிதாரிகள் கல்லூரியுடன் இணைந்து சபுகஸ்கந்தவில் உள்ள பாதுகாப்பு சேவை கட்டளை மற்றும் பதவிதாரிகள் கல்லூரியினால் பெப்ரவரி 14-15 திகதிகளில் இரண்டாவது ‘தெற்காசிய சர்வதேச தளபதிகள் மாநாடு’ நடாத்தப்பட்டது. பல்வேறு துறைகளில் தொழில்முறை இராணுவக் கல்வியின் தற்போதைய சூழல்கள் மற்றும் எதிர்காலம் என்பன பற்றிய ஒரு தனித்துவமான இங்கு கலந்துரையாடல் இடம்பெற்றது.

இம் மாநாட்டின் முக்கிய நோக்கம் தொழில்முறை இராணுவக் கல்வியின் சமகால அம்சங்கள் மற்றும் பரஸ்பர நலன் தொடர்பான விடயங்களில் ஒத்துழைப்பை மேம்படுத்துதல் பற்றிய கருத்துக்களைப் பரிமாறிக்கொள்வது மற்றும் பகிர்ந்து கொள்வதாகும். பங்கேற்கும் நாடுகளின் தளபதிகள் மற்றும் இங்கிலாந்தைச் சேர்ந்த சில அறிவுஜீவிகள் ‘21வது நூற்றாண்டில் கல்வியை வழங்குதல்’, ‘எதிர்கால வகுப்பறைகள் மற்றும் எதிர்காலக் கல்வி’, தொழிநுட்பமுறையாக்கல், கல்வித் தலைமுறை Z,பொருளாதாரப் போர் எதிர்ப்பு, ஆராய்ச்சி மையம் மற்றும் இராணுவக் கல்வியின் தற்போதைய சூழல்களில் இராணுவ நெறிமுறைகள் குறித்து தகவல்களை பரிமாறிக்கொண்டனர்.

பாதுகாப்பு சேவை கட்டளை மற்றும் பதவிதாரிகள் கல்லூரியின் தளபதி மேஜர் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ அவர்கள் அனைவரையும் வரவேற்றதுடன் திரு. லலித் வீரதுங்க அவர்களால் “தொழில்முறை இராணுவக் கல்வி ஏன் முக்கியமானது, பிராந்தியக் கண்ணோட்டத்துடன் தொழில்முறை இராணுவக் கல்வியின் கண்ணோட்டம்” என்ற தலைப்பில் முக்கிய உரை நிகழ்த்தப்பட்டது.லலித் வீரதுங்க அவர்கள் தனது உரையில்:

"இன்றைய உத்வேகம் தரும் தலைவர்கள் தங்கள் பதவியின் நற்பண்புகளால் அல்ல, மாறாக ஒரு பெரிய நோக்கத்திற்காக - ஒரு பார்வைக்காக தங்களை சவால் செய்ய தங்கள் ஊழியர்களை ஊக்குவிப்பதன் மூலம் வழிநடத்துகிறார்கள். தொலைநோக்கு நிறுவனங்கள் சிறந்த கலாசாரங்களை வளர்ப்பதில் குறிப்பாக கவனம் செலுத்தியது மற்றும் இலாப நோக்கத்தைத் தாண்டிய ஒரு சித்தாந்தத்தைக் கடைப்பிடித்தது. ஒரு தலைவராக நீங்கள் வழிநடத்தும் ஊழியர்களுக்கு ஒரு அசாதாரண பார்வை இருக்கலாம். இருப்பினும் இந்த பார்வையை உங்களால் திறம்பட வெளிப்படுத்த முடியாவிட்டால் உங்களுக்காக பணிபுரியும் நபர்களை உங்களால் ஊக்குவிக்க முடியாது. இளம் அதிகாரிகள் எந்த சூழ்நிலையிலும் எளிதாக ஒருங்கிணைக்க இது உதவும். இன்றைய தலைவர்கள் கொந்தளிப்பான, நிச்சயமற்ற, சிக்கலான மற்றும் தெளிவற்ற சூழல்களில் செழித்து வளர்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நிறுவனங்களுக்குள்ளும் அதைச் சுற்றியுள்ள பங்குதாரர் உறவுகளும் செயல்முறைகளும் பெருகிய முறையில் மாறும் மற்றும் கணிக்க முடியாததாகிவிட்டன. கொந்தளிப்பான, நிச்சயமற்ற, சிக்கலான மற்றும் தெளிவற்ற சூழல்களில் உலகில் செழிக்க, ஆயுதப் படையினர் தங்களைச் சுற்றியுள்ள மாறிவரும் போக்குகளைப் பற்றி தொடர்ந்து அறிந்திருக்க வேண்டும் மற்றும் அவர்களின் உத்திகளை முன்கூட்டியே திட்டமிட வேண்டியதுடன் நெகிழ்வான மற்றும் சுறுசுறுப்பாக இருக்க வேண்டும்," என்று சுட்டிக்காட்டினார்.

மேஜர் ஜெனரல் எம்.டி. பைசுர் ரஹ்மான், மேஜர் ஜெனரல் அமர் அஹ்சன் நவாஸ் (மெய்நிகர் பங்கேற்பு), மேஜர் ஜெனரல் லசந்த ரோட்ரிகோ, மேஜர் ஜெனரல் ஆண்ட்ரூ ரோ, மற்றும் பிரிகேடியர் ஜெனரல் வஹீத் வைஸ் ஆகியோர் முறையே பங்களதேஷ், பாகிஸ்தான் இலங்கை, ஐக்கிய இராச்சியம் மற்றும் மாலைத்தீவு ஆகிய நாடுகளின் பதவிதாரிகள் கல்லூரிகளை பிரதிநிதித்துவப்படுத்தினர்.

தெற்காசிய இராணுவ நிறுவனங்களுக்கிடையில் தொழில்முறை இராணுவக் கல்வித் துறையில் பரஸ்பர ஒத்துழைப்புக்கான பிணைப்புகளை வலுப்படுத்தும் தெற்காசிய சர்வதேச தளபதிகளின் மாநாட்டின் இரண்டு நாள் அமர்வு முடிவில் கேடயம் மற்றும் நினைவுப் பரிசுகள் பரிமாற்றத்துடன் நிறைவடைந்தது.

நன்றி - www.army.lk