இந்தோனேஷிய கடற்படை கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது

பெப்ரவரி 20, 2023

இந்தோனேஷிய கடற்படைக்குச் சொந்தமான 'KRI Raden Eddy Martadinata - 331' என்ற கடற்படை கப்பல் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு நேற்று (பெப்ரவரி 19) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.

கெப்டன் Nopriadi, தலைமையில் வருகைதந்த குறித்த கப்பலானது கடற்படையினரால் கடற்படை மரபுகளுக்கமைய சம்பிரதாய பூர்வ வரவேற்பளிக்கப்பட்டது.

KRI Raden Eddy Martadinata - 331 பிரிவைச் சேர்ந்த 105.02 மீ நீளமான இந்த கப்பல் 138 கடற்படை பணியாளர்களால் நிர்வகிக்கப்படுகிறது என கடற்படை தெரிவித்துள்ளது.

இந்த கப்பல் தனது உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக்கொண்டு 2023 ஆம் ஆண்டு பெப்ரவரி 21 ஆம் திகதி நாட்டை விட்டு புறப்பட உள்ளதாக கடற்படை மேலும் தெரிவித்துள்ளது.